சோரம்
உன்குரல் தேய்கிறது
அதில் தொனிக்கும்
நடுக்கமும் கூட
என்னுள் படிகிறது
தெளிவாகத் தெரிந்த முகம்
இப்போது கலங்கிய தண்ணீரில்
சிதறுகிறது பிம்பமாய்
அது பிம்பமில்லை
உன் முகம்தான்
நடிகனின் ஒப்பனையை விட
துரிதமாக கலைகிறது
உன் பொய்மை
அத்தனை ரசமான
சொற்களை எங்கிருந்து
கொணர்ந்தாய் நண்பா
தொட்டிக்குள் மீனைப்போல்
அலையும் அந்தச் சொற்கள்
இப்போது அனாதையாகி
விட்டன
போதும்
இனியும்
தந்திரமென்று சொல்லி
நட்பு வேடம் பூணாதே
பரத்தையின் அறத்தைக் கூட
பேணாத நட்பின்
சோரத்தை என்னவென்பது.
மேனா.உலகநாதன்
*
Comments
Post a Comment