Skip to main content

மிருகப் பிரவேசம்



அந்த விசித்திர மிருகம் வந்தே விட்டது
கொன்று குவித்து ரத்தம் சுவைத்த
சுவடுகள் உலர்ந்து உதிர்ந்து போனதாக நினைப்பு


உதடுகளைச்
சப்பியபடியே அதன் அடுத்த உலாவைத்
தொடங்கி விட்டது


வெறுப்பு அரசியலின் வீரதீர
முழக்கத்துடன் தன் அகண்ட கனவை
நனவாக்கும் பயணத்தையும் தான்


தேசிய ஒருமைப்பாடு
வந்தே மாதரம்
ராணுவ பக்தி
வீரர்களுக்கு அஞ்சலி
என வசீகரமான
அரசியல் ஒப்பனைகள்
அனைத்தையும்
புனைந்து வந்து
அரங்கேறிய அதன்
நர்த்தனத்தை ரசிப்பதில்
நமக்கு எந்த வெட்கமும் இல்லை


தமிழில் வணக்கம்
சொன்னால் போதும்
எவனும் நம் தலைவனாகி
விடுவான்


மற்றபடி
கர்ப்பிணிப் பெண்ணின்
கருவறை பிளந்து
பச்சிளம் சிசுவை
அவள் கண்முன்னாலேயே
கூறுபோட்ட குஜராத்
குரூரம் குறித்தெல்லாம்
நமக்கென்ன கவலை


எங்கோ ஒரு இஸ்லாமியப்
பெண்ணுக்கு நேர்ந்தது


அவள் என்ன
நம் சகோதரியா
கதறவும் பதறவும்


நமக்குத் தேவை
இப்போது அரசியல் சுத்திகரிப்பு
இனச் சுத்திகரிப்பைப் போல

(26.09.2013)

Comments

Popular posts from this blog

கொலைகாரன்

    செல்பேசி இணைப்பை அவன் துண்டித்த வேகம் என்னைப் படபடக்க வைத்தது   அவனுக்கும் எனக்கும் இடையே கோபப்பட காரண காரியங்கள் ஏதுமில்லை   மனம் வெறுமையாகும் போது காரணமின்றி அவனை அழைப்பேன்   நான் எதிர்பாராத விளக்கம் ஒன்றைக் கூறி திடுக்கிட வைப்பான்   அதுவே அப்போதைக்கு எனக்கு போதுமானதாக இருக்கும்.   புரை ஏறுதலை நிறுத்தும் பொய்யதிர்வைப் போன்ற விசித்திரமான சிகிச்சை அது   சொல்லப் போனால் அன்று அவனை அழைக்க ஒரு காரணம் இருந்தது   விடாத பின் கழுத்து வலி குறித்து அவனுடன் பகிர்ந்து கொள்ளும் ஆயாசத்துடன்தான் அழைத்தேன்   வலி பற்றி விவரித்தேன் வலியின் அனுபவங்கள் அவனுக்கும் இருந்தது   மருத்துவர் ஒருவரைப் பரிந்துரைத்தான்   அழைத்த போது அவர் வேலையாக இருந்தார்   பின்னர் மருத்துவரும் அழைக்கவில்லை நானும் அழைக்கவில்லை வலி தொடர்ந்தது   ஆனால் அவனை நான் மீண்டும் அழைத்தேன்   மருத்துவரிடம் பேசினாயா? ...

மக்காத ஓலைகள்

இன்று விசுக்கென்று வந்துவிட்டது அந்த இடம்   நீண்ட தூர சைக்கிள் பயணத்தின் பிறகு அதைக் கண்டடையும் போது உள்ளத்தின் சிறகுகள் வானளாவ விரிந்து படபடக்கும்   வியர்வையில் நனையும் புன்னகை மின்னி மிளிரும்     காராஞ் செடியும் சூராம் பழமும் கொண்டையும் குஞ்சமுமாய் குலுங்கும் பஞ்சவர்ணப் பூக்களும் மஞ்சள் வண்ணத்தில் ஆங்காங்கே பூத்து கூடி நின்று குதூகலித்து பேசிச் சிரிக்கும் ஆவாரம் செடிகளும் இன்னும் பெயர் அறியா தாவரங்களும்   தங்கள் மூச்சணுக்களைக் கலந்து பிசைந்து காற்றுக்குள் பொதிந்தனுப்பும் அந்த வாசனைக்கு என்ன பெயர்?   வெயிலின் மீதேறி வந்தெமைத் தழுவிய அந்தச் சுகந்தத்தை இன்றுவரை வேறெங்கும் என்னால் நுகர்ந்துணர முடியவில்லை   அதோ வந்தாச்சு ஒற்றைப் பனை   பள்ளிக்குச் செல்லும் தூரத்தின் சரிபாதியை கடந்த நிம்மதி   இனி உற்சாகம் கரைபுரளும்   கால்கள் வேகமெடுக்கும் சைக்கிள் சக்கரங்கள் காற்றில் மிதக்கும்   பள்ளி செல்லும் வரை பற்கள் மூ...

எங்கே அந்தச் சூரியன்?

  (தாகம் இதழுக்காக 2017 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரையின் முழுமையான வடிவம்... உடன்பிறப்புகள் கலைஞருக்கு எழுதுவதாக அமைந்தது)   ‘அ ம்பாள் எப்போதடா பேசினாள்… அறிவு கெட்டவனே…’ ‘ராமர் எந்தக் கோவிலில் பொறியியல் படித்தார்’ இந்தக் கேள்விகளை இந்தியாவில் உள்ள எந்தத் தலைவனாலாவது இன்று கேட்க முடியுமா? புராண, இதிகாச பொய்களைக் கட்டவிழ்த்து விட்டபடி, சுவாமி… நாதா… என்று பிதற்றிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவின் உச்சி மண்டையில் அடித்து நீ எழுப்பிய அந்த முதல் கேள்வியில் பழமைவாதிகள் நிலைகுலைந்ததை பழங்கணக்கெற்று  ஒதுக்கிவிட முடியுமா? அதற்குப் பிறகு சுமார் 50 ஆண்டுகள் கடந்த பின்னர், பகுத்தறிவுக் காரமும், தீரமும் சற்றும் குறையாமல், சேதுசமுத்திரத் திட்டத்திற்கு எதிராக ராமர்பாலம் என்ற கற்பனையை முன்வைத்த இந்துத்துவ மூர்க்கர்கள் இடிந்து போகும் வகையில் நீ எழுப்பியதுதானே அந்த இரண்டாவது கேள்வி. தமிழ்ச் சமூகத்தை, பொய்ம்மைகளின் மயக்கத்தில் இருந்து விழித்தெழ வைத்து, அறிவு வெளிச்சம் பெருக்கெடுக்கும் பெருவெளிக்கு இழுத்து வர வேண்டும் என்பதற்காக இதே போன்ற எத்தனையோ கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருப்பாயே? இப்போது ...