000 வலிமையின் நிழல் உணர்வெங்கும் படிந்து பரவி புழுங்கியது எறும்பென்பதால் நசுக்கிக் கடந்த பாதங்களிடம் கருணை கோரி வரிசை கட்டிய பிற எறும்புகளும் கொத்துக் கொத்தாகச் செத்தொழிந்தன வலிமையின் மதர்ப்பேறிய பாதங்களின் காலணிக்கு சற்றே கருணை சுரந்தது உயிரற்ற எறும்புகளை மேலும் சிதைக்காமல் உதிர்த்தபடி பாதங்களை பணிந்து பிசகின்றி தன் பயணத்தை மேற்கொண்டது ஈகையின்மைக்கான இயற்கையின் கட்டமைப்பு வெகு கச்சிதம் பிசிறே இல்லாத ஜெயராஜின் ஓவியத்தைப் போல.
பால்கனி கிராதிக் கம்பிகளின் மீது தத்தியும் தாவிக் குதித்தும் முகம் காட்டி விளையாடிய போது இனம்புரியா கொண்டாட்டம் என் மனதிற்குள் விகசிக்கும் நேரம் போவதறியாமல் அவற்றின் கோமாளி கூத்தழகை ரசித்தபடி எனை மறந்து கிரங்கிக் கிடந்திருக்கிறேன் பொசு பொசு உடலும் முக்கோண வடிவில் அம்புக் குறி போல் தோன்றும் முகத்துடன் மின்னல் வேகத்தில் முன்னோக்கி நகர்ந்தோடும் அவற்றின் உடல்மொழியும் குழந்தைகளின் செல்லச் சிணுங்கலை சீண்டல் குறும்பை நினைவு படுத்தும் வெறுக்கவே முடியாத அவற்றின் வினோதம் நனவிலி மனதின் இடுக்குகளுக்குள் ஊடுருவி கிச்சு கிச்சு மூட்டும் உணர்வின் சிலிர்ப்பில் அறிவு கூசும் சிரிப்பு முட்டும் ஒரு காலை நேரத்தில் அது நடந்தது பால்கனி வெளியில் மறந்து வைத்துவிட்ட பழம் புத்தகம் நீண்ட நெடிய வாழ்வின் வாசனை பொதிந்து பழுப்பேறிய பக்கங்கள் கீறிக் கிழித்து சிதைக்கப்பட்ட துண்டுகளாக சிதறிக் கிட...