பழங்காலக் காதலியின் புதிய பூஜை அறை வழிபடவும், வேண்டவும் ஏதுமற்ற வெறுமை கண்களின் வழியாக நீர் உகுத்தது சில்லிட்டிருந்தது அறை வெளி வாசலில் நின்ற வேம்பில் இருந்து உதிர்ந்து பறந்து வந்த பழுத்த இலை ஒன்று ஈரப் பதம் கொண்டு அவன் தோளில் அமர்ந்தது சட்டென விழித்து பீறிட்ட இளமையின் உலுக்கலில் வேப்பங்கிளையில் ஓய்வாய் அமர்ந்திருந்த சிட்டுகள் விசுக்கென பறந்து விண்ணில் மிதந்தன
வலியவை மட்டுமே வாழ்வதற்கானதன்று இவ்வுலகம்