Skip to main content

Posts

Showing posts from 2023

பீறிடும் இறந்த காலம்

  வண்ணம்  வெவெளுக்காத நினைவுகள் அலைபாயும் வெளியில் இருந்து வாழ்வை அத்தனை  எளிதில்  பிரித்தெடுக்க முடிவதில்லை பீறிடும் இறந்த காலத்தின் மணத்தில்  மூச்சுத் திணறும் நிகழ்காலத்தின் மீதேறி  நர்த்தனமாடிக் களைத்துப் போய்  வருகிறது எதிர்காலம் பசுமையும் வெயிலும் முயங்கிச் சூழ்ந்த  பழங் கூட்டை நோக்கித் திரும்பி  வந்திருக்கிறது பறவை இதயத்தின் படபடப்பில் சிறகுகள் சோர்ந்து மண்டியிட்ட போது தலைகோதி அமைதிப்  படுத்திய கரங்களின் வழியே சுரந்து கவிந்தது ஈன்ற பொழுதினும் பெரிதுவந்து கசிந்த தாய்மையின் நிழல்

அண்ணா: போற்றியது போதும், புரிந்துகொள்வோம்: மேனா. உலகநாதன்

 Wow தமிழா இணையதளத்தில் வெளியான கட்டுரை (03.02.2023) -  இணைப்பு - https://wowtam.com/4-anna-enough-praise-lets-understand/16507/ தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத புவி ஈர்ப்பு விசையாக, இன்றளவும் மக்களைச் சுண்டி இழுத்துச் சுழன்று வரும் மூன்றெழுத்து மந்திரச் சொல் ‘அண்ணா’. 1969 பிப்ரவரி 3 அவர் மறைந்த போது, அப்போதைய தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர், சுமார் ஒன்றரை கோடி பேர் சென்னையில் கூடினர். இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள ஒரு மாநில முதலமைச்சரின் மறைவுக்கு இத்தனை பெரிய மக்கள் கூட்டமா என உலகமே வியந்தது. அண்ணனை வழியனுப்ப வந்த அந்தக் கண்ணீர்க் கூட்டம் கின்னஸ் புத்தகத்தில் சாதனையாகவும் இடம் பெற்றது. காவிபடிந்த பற்கள்… அன்றாட சவரத்தை மறந்த முகம்… நிறமோ மங்கலானது… உயரமோ குட்டை… இப்படிப்பட்ட தோற்றத்தைக் கொண்ட ஒரு மனிதர் மீது, மக்களுக்கு இத்தனை பெரிய ஈர்ப்பு ஏற்பட என்ன காரணம்…? தமிழகத்தின் இன்றைய தலைமுறைக்கு எளிதில் புரிந்துகொள்ள முடியாத புதிர்தான் இது. பகுத்தறிவு, சமூகநீதி பாதையில் அவர் மேற்கொண்ட பயணம், எழுச்சியுடன் தொடங்கிய அரசியல் இயக்கம், அசாத்...

இளவேனில்: சிவந்து கருத்த சிந்தனை நதி! (05.01.2021 அன்று இளவேனில் மறைவை ஒட்டி இந்து தமிழ் நாளேட்டில் நான் எழுதி வெளிவந்த கட்டுரை)

  x https://www.hindutamil.in/news/opinion/columns/619182-ilavenil.html “ஆனாலும் இந்த உலகம் இன்னும் அழகானதாகவே இருக்கிறது”, ‘ஆத்மா என்றொரு தெருப்பாடகன்’ என்ற தனது படைப்பை இப்படித்தான் தொடங்கியிருப்பார் இளவேனில். நிறையப் பேர் அதன் தாக்கத்தில் கவிதையெழுத வந்தார்கள் என்பது அப்படைப்பின் வெற்றி. நெடும் பாலையில் கொடும் பயணம் என்று சொல்லத் தக்க வாழ்வை நெடுகச் சுமக்க நேர்ந்த நிலையிலும், குதர்க்கமும் குழப்பமுமான இந்த மனிதர்களை ஒருபோதும் அவருக்கு வெறுக்கத் தெரியவில்லை. அதனால்தான் இந்த உலகம் அவருக்கு இறுதிவரை அழகானதாகவே காட்சியளித்திருக்கிறது. “மனிதனைவிடச் சிறந்த புத்தகம் எக்காலத்திலும் எழுதப்பட்டதில்லை” என்ற அவரது கனவுநாயகன் கார்க்கியின் சொல்லாடலை அடிக்கடி உச்சரித்துப் புளகாங்கிதம் அடைவதற்கும்கூட, மானுடத்தின் மீதான தீராக் காதலே காரணம். பொதுவெளியில் பெரும் அடையாளங்களாக உலவிவரும் பலருக்கும் இளவேனில் என்ற சிந்தனையாளர், ஒரு ரகசிய சினேகிதனாகவே இருந்துவந்திருக்கிறார். ஏனெனில், மானுடம் குறித்து அவரிடமிருந்து ஊற்றெடுத்துக்கொண்டே இருந்த தீராத பாடுபொருள் மீதான மோகமே காரணம். சிறுவனாக இருந்தபோதே கோவில்ப...