பீறிடும் இறந்த காலம்
வண்ணம்
வெவெளுக்காத
நினைவுகள்
அலைபாயும்
வெளியில்
இருந்து
வாழ்வை
அத்தனை
எளிதில்
பிரித்தெடுக்க
முடிவதில்லை
பீறிடும்
இறந்த காலத்தின்
மணத்தில்
மூச்சுத் திணறும்
நிகழ்காலத்தின்
மீதேறி
நர்த்தனமாடிக்
களைத்துப் போய்
வருகிறது
எதிர்காலம்
பசுமையும்
வெயிலும்
முயங்கிச்
சூழ்ந்த
பழங் கூட்டை
நோக்கித்
திரும்பி
வந்திருக்கிறது
பறவை
இதயத்தின்
படபடப்பில்
சிறகுகள்
சோர்ந்து
மண்டியிட்ட
போது
தலைகோதி
அமைதிப்
படுத்திய
கரங்களின்
வழியே
சுரந்து
கவிந்தது
ஈன்ற
பொழுதினும்
பெரிதுவந்து
கசிந்த
தாய்மையின்
நிழல்

Comments
Post a Comment