உதிர்ப்பு



வாழ்வின் தகிப்பில்
கொதித்து அடங்குகிறது
உயிர் உலை


மெல்லக்கீழிறங்கிக் குளிர்ந்து
உரையும் குருதியின் திட்டில்
படிகிறது என் ஓவியம்


சிரிக்க மறுக்கும் இதழ்களில்
இருந்து உதிர்கிறது
ஒரு துளிப் புன்னகை


உடலெங்கும் நமநமக்கும்
தினவில் பெருக்கெடுக்கிறது
உன்மத்தம்


உக்கிரமாக உராய உராய
செதில்களைப் போல
உதிர்கிறது சிறுமை



Comments

Popular posts from this blog

மக்காத ஓலைகள்

கொலைகாரன்

வாசனை