பெரும் வலி

 



உதிர்ந்து விழும் போதே 

காற்றில் எழுதி வந்த 

தன் சரிதையின் 

கனம் அழுத்த

மண்ணில் வீழும் மலர்களின்

இறுதி மூச்சில்

கலந்திருக்கும் விம்மலை

மொழிபெயர்த்து 

கூவிய படியே 

சுற்றித் திரிகிறது

உயிர்வளி

பெரும் வலியுடன்



Comments

Popular posts from this blog

மக்காத ஓலைகள்

கொலைகாரன்

வாசனை