Skip to main content

Posts

இது நியாயமா ‘அன்பு’?

அது எண்பதுகளின் தொடக்கம். பதின் பருவத்திலேயே உனைச் சந்தித்து விட்டேன். நர்சம்மா மகன் என்ற அறிமுகத்துடன் தமயந்தி அக்காள் அறிமுகப்படுத்தி வைத்தது. பின்னர்தான் தெரிந்தது நர்சம்மா என்றும், பார்வதி அம்மா என்றும் அழைக்கப்பட்ட அந்தத் தாய், என் தாயாருக்கு மட்டுமின்றி அந்தப் பகுதியில் பலருக்கும் அறிமுகமான, ஆசுவாசமான நட்பாகவும், உறவாகவும் இருந்துள்ளார் என்பது. அவரது அன்புச் செல்வனான - அன்புக்கரசனாகிய நீ, ‘அன்பு’ என்ற அடையாளத்துடன் எனைச் சார்ந்த எல்லோர் நெஞ்சிலும் குறுகிய காலத்திற்குள்ளேயே நிறைந்து விட்டாய். ஆனால், உனக்கும் எனக்குமான நெருக்கம் அதிகமானதற்கு அது மட்டுமே காரணம் அன்று. இளம் வயதிலேயே உன் நிதானமும், தீர்க்கமும், ஆழமான வாசிப்பும்தான் நான் அதுவரை பார்த்த நண்பர்களிடமிருந்து உன்னை வேறுபடுத்திக் காட்டின. அந்த நட்பை மேலும் ஆழமாக்கி அழகாக்கியவர் நம் இருவருக்கும் மூத்த தோழமையாய் இன்றுவரை திகழும் அன்பு அண்ணன் அயூப்கான். என் பெற்றோருக்கு எனைவிடப் பிரியத்திற்குரிய பிள்ளையானாய். என் சகோதர, சகோதரிகள், அவர்களது குழந்தைகள் அனைவருக்கும் அண்ணனாக, தம்பியாக, சித்தப்பாவாக, மாமாவாக, அண்ணனாக, தம்பியாக … ...

சிறுமை (27.02. 2019 - #SaveAbhinandan #SayNoToWar )

போர் எனும் போது பூமியும் மனமும் ஒன்றாகவே அதிர்கின்றன புயலெனக் கிளம்பும் புழுதியின் மூர்க்கத்தில் பூக்கள் உதிர்ந்து மடிகின்றன போர்… ஒருபோதும் மனித இனத்தின் மேலான அடையாளங்களில் ஒன்றானதில்லை ஆகிடவும் முடியாது ஆனாலும் போர்களை மனிதர்களால் தவிர்க்க முடியவில்லை விடுதலை உணர்வால் வீரம் பொங்க தோள்கள் துடித்தெழ தொடுக்கப்பட்ட போர்களால் ஏற்படும் புண்ணின் வலி பெருமிதங்களின் ஒத்தடத்தில் காணாமல் போகக் கூடும் நாடுபிடிக்கும் ஆசையுடன் நடைபெற்ற நாய்ச் சண்டைகளோ மானுடம் அதுவரை அடைந்த நாகரிக முகத்தை கீறியும், குதறியும் குரூரமாக்கிச் சிதைத்து விடும் இரண்டுமில்லாமல் இப்போது நடப்பது ஆட்சியை பிடிப்பதற்கான அவலட்சணப் போர் பிச்சை எடுக்க வைத்த பாகனின் சிறுமையை யானையின் கம்பீரம் ஒருபோதும் மன்னித்ததில்லை

தோழர் நல்லகண்ணு என்ற அந்தப் பேரெளிமை!

  என்ன சொல்வது... அப்பழுக்கில்லா அரசியலுக்கு, அரிதினும், அரிதான சான்றாக உயிர்த்திருந்த தோழர் நல்லகண்ணு என்ற அந்தப் பேரெளிமை நம்மை விட்டு பிரிந்து சென்றுவிட்டது. "வெறும் செய்தி - அரசியல் எழுத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், படைப்பாக்கத்தின் பக்கம் கவனம் செலுத்து" என்று பேட்டிக்காகவும், பிற பணிகளுக்காகவும் சந்தித்த போதெல்லாம் தந்தையைப் போல் அறிவுரை சொன்ன ஆசான்! அத்தனை பெரிய தியாகங்களைச் செய்த தலைவர், அதன் சுவடுகளே தெரியாமல் எளிய இதழாளனான என்னுடன் பழகிய அந்தப் பொழுதுகளின் நினைவுகள், இன்றும் எனக்குள் ஆசுவாசம் தந்து சிறகடிப்பவை! இனி அவரைக் காண்பதோ, உரையாடுவதோ சாத்தியமில்லை என்ற தன்னுணர்வு பெரும் வலியாய் உணர்வு முழுவதும் பரவுகிறது. என்னைப் போல் எத்தனையோ எளிய உயிரிகளின் தோழனாக, தந்தையாக அரவணைத்த பெருங்கருணைப் பேராளனின் பிரிவு தாங்க முடியாத துயரைத் தருகிறது. சிவப்பு வண்ணத்திற்கு - அன்பு, பரிவு, பரந்த உள்ளம், எளிமை, நேர்மை, இனிமை என எத்தனையோ நேர்மறை அடையாளத்தைத் தந்த ஆகச்சிறந்த அரசியல் ஆளுமை! இருளை விழுங்கி ஒளிரும் நிலவைப் போல, இந்தச் சமூகத்தின் சிறுமைகள் அனைத்தையும் விழுங்கிச் செறித்து சி...

கொலைகாரன்

    செல்பேசி இணைப்பை அவன் துண்டித்த வேகம் என்னைப் படபடக்க வைத்தது   அவனுக்கும் எனக்கும் இடையே கோபப்பட காரண காரியங்கள் ஏதுமில்லை   மனம் வெறுமையாகும் போது காரணமின்றி அவனை அழைப்பேன்   நான் எதிர்பாராத விளக்கம் ஒன்றைக் கூறி திடுக்கிட வைப்பான்   அதுவே அப்போதைக்கு எனக்கு போதுமானதாக இருக்கும்.   புரை ஏறுதலை நிறுத்தும் பொய்யதிர்வைப் போன்ற விசித்திரமான சிகிச்சை அது   சொல்லப் போனால் அன்று அவனை அழைக்க ஒரு காரணம் இருந்தது   விடாத பின் கழுத்து வலி குறித்து அவனுடன் பகிர்ந்து கொள்ளும் ஆயாசத்துடன்தான் அழைத்தேன்   வலி பற்றி விவரித்தேன் வலியின் அனுபவங்கள் அவனுக்கும் இருந்தது   மருத்துவர் ஒருவரைப் பரிந்துரைத்தான்   அழைத்த போது அவர் வேலையாக இருந்தார்   பின்னர் மருத்துவரும் அழைக்கவில்லை நானும் அழைக்கவில்லை வலி தொடர்ந்தது   ஆனால் அவனை நான் மீண்டும் அழைத்தேன்   மருத்துவரிடம் பேசினாயா? ...

மக்காத ஓலைகள்

இன்று விசுக்கென்று வந்துவிட்டது அந்த இடம்   நீண்ட தூர சைக்கிள் பயணத்தின் பிறகு அதைக் கண்டடையும் போது உள்ளத்தின் சிறகுகள் வானளாவ விரிந்து படபடக்கும்   வியர்வையில் நனையும் புன்னகை மின்னி மிளிரும்     காராஞ் செடியும் சூராம் பழமும் கொண்டையும் குஞ்சமுமாய் குலுங்கும் பஞ்சவர்ணப் பூக்களும் மஞ்சள் வண்ணத்தில் ஆங்காங்கே பூத்து கூடி நின்று குதூகலித்து பேசிச் சிரிக்கும் ஆவாரம் செடிகளும் இன்னும் பெயர் அறியா தாவரங்களும்   தங்கள் மூச்சணுக்களைக் கலந்து பிசைந்து காற்றுக்குள் பொதிந்தனுப்பும் அந்த வாசனைக்கு என்ன பெயர்?   வெயிலின் மீதேறி வந்தெமைத் தழுவிய அந்தச் சுகந்தத்தை இன்றுவரை வேறெங்கும் என்னால் நுகர்ந்துணர முடியவில்லை   அதோ வந்தாச்சு ஒற்றைப் பனை   பள்ளிக்குச் செல்லும் தூரத்தின் சரிபாதியை கடந்த நிம்மதி   இனி உற்சாகம் கரைபுரளும்   கால்கள் வேகமெடுக்கும் சைக்கிள் சக்கரங்கள் காற்றில் மிதக்கும்   பள்ளி செல்லும் வரை பற்கள் மூ...