காலக்கிழவன் - நந்தன் வழி, 2002 மே மாத இதழில் வெளியான "காலக் கிழவன்" என்ற எனது சிறுகதை
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
நந்தன் வழி 2002 மே மாத இதழில் "செம்பரிதி" என்ற புனைபெயரில் நான் எழுதிய "காலக் கிழவன்" என்ற சிறுகதை... ஏதோ ஒரு தேடலில் எதிர்பாராமல் இணையத்தில் அகப்பட்டது...!
இன்று விசுக்கென்று வந்துவிட்டது அந்த இடம் நீண்ட தூர சைக்கிள் பயணத்தின் பிறகு அதைக் கண்டடையும் போது உள்ளத்தின் சிறகுகள் வானளாவ விரிந்து படபடக்கும் வியர்வையில் நனையும் புன்னகை மின்னி மிளிரும் காராஞ் செடியும் சூராம் பழமும் கொண்டையும் குஞ்சமுமாய் குலுங்கும் பஞ்சவர்ணப் பூக்களும் மஞ்சள் வண்ணத்தில் ஆங்காங்கே பூத்து கூடி நின்று குதூகலித்து பேசிச் சிரிக்கும் ஆவாரம் செடிகளும் இன்னும் பெயர் அறியா தாவரங்களும் தங்கள் மூச்சணுக்களைக் கலந்து பிசைந்து காற்றுக்குள் பொதிந்தனுப்பும் அந்த வாசனைக்கு என்ன பெயர்? வெயிலின் மீதேறி வந்தெமைத் தழுவிய அந்தச் சுகந்தத்தை இன்றுவரை வேறெங்கும் என்னால் நுகர்ந்துணர முடியவில்லை அதோ வந்தாச்சு ஒற்றைப் பனை பள்ளிக்குச் செல்லும் தூரத்தின் சரிபாதியை கடந்த நிம்மதி இனி உற்சாகம் கரைபுரளும் கால்கள் வேகமெடுக்கும் சைக்கிள் சக்கரங்கள் காற்றில் மிதக்கும் பள்ளி செல்லும் வரை பற்கள் மூ...
செல்பேசி இணைப்பை அவன் துண்டித்த வேகம் என்னைப் படபடக்க வைத்தது அவனுக்கும் எனக்கும் இடையே கோபப்பட காரண காரியங்கள் ஏதுமில்லை மனம் வெறுமையாகும் போது காரணமின்றி அவனை அழைப்பேன் நான் எதிர்பாராத விளக்கம் ஒன்றைக் கூறி திடுக்கிட வைப்பான் அதுவே அப்போதைக்கு எனக்கு போதுமானதாக இருக்கும். புரை ஏறுதலை நிறுத்தும் பொய்யதிர்வைப் போன்ற விசித்திரமான சிகிச்சை அது சொல்லப் போனால் அன்று அவனை அழைக்க ஒரு காரணம் இருந்தது விடாத பின் கழுத்து வலி குறித்து அவனுடன் பகிர்ந்து கொள்ளும் ஆயாசத்துடன்தான் அழைத்தேன் வலி பற்றி விவரித்தேன் வலியின் அனுபவங்கள் அவனுக்கும் இருந்தது மருத்துவர் ஒருவரைப் பரிந்துரைத்தான் அழைத்த போது அவர் வேலையாக இருந்தார் பின்னர் மருத்துவரும் அழைக்கவில்லை நானும் அழைக்கவில்லை வலி தொடர்ந்தது ஆனால் அவனை நான் மீண்டும் அழைத்தேன் மருத்துவரிடம் பேசினாயா? ...
விருப்பமில்லைதான் தெருக்களில் சிதறிக்கிடக்கும் பூக்கள் மிதிபடுகின்றன மலர்களும் நிணமும் கலந்த வாசனை நிறமற்ற காலத்தைச் சுமந்து வந்து நாசிக்குள் திணிக்கிறது வியர்வையாய் கசியும் பிரிவின் ஆற்றாமை கேள்வித் துளிகளாய் மண்ணில் வீழ்ந்து நிழலென உயிர்த்து பின்தொடர்கிறது கடந்து போகும் மேகத்திரளின் மெல்லிய இருட்டில் கலந்து என்மேல் கவிகிறது கேள்விக்குறி போல் எனை வளைத்து முதுகில் ஏறி நிற்கும் நிழலின் சுமை தாளாமல் நெஞ்சடைக்கிறது விண்ணெனத் தெறிக்கும் நெற்றிப் பொட்டில் இருந்து சிதறும் பொறியின் வெளிச்சத்தில் மிதக்கும் சொற்களைப் பிடிக்க யத்தனித்த போது நேர்கோடாக நிமிர்கிறேன் வாழ்வின் வாசனை பூமாரி பொழிகிறது.
Comments
Post a Comment