Posts

Showing posts from 2019

அவன் - அவள் - அது

பழங்காலக் காதலியின் புதிய பூஜை அறை வழிபடவும், வேண்டவும் ஏதுமற்ற வெறுமை கண்களின் வழியாக நீர் உகுத்தது சில்லிட்டிருந்தது அறை வெளி வாசலில் நின்ற வேம்பில் இருந்து உதிர்ந்து பறந்து வந்த பழுத்த இலை ஒன்று ஈரப் பதம் கொண்டு அவன் தோளில் அமர்ந்தது சட்டென விழித்து பீறிட்ட இளமையின் உலுக்கலில் வேப்பங்கிளையில் ஓய்வாய் அமர்ந்திருந்த சிட்டுகள் விசுக்கென பறந்து விண்ணில் மிதந்தன 

சிதறல்

வண்ணங்கள் மாறுகின்றன வடிவங்கள் குழம்புகின்றன மங்கலாக சிதறிக் கிடக்கிறது விண்வெளி எங்கும் உண்மை உயிரெனப் பரந்து பறந்து

அரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை?: செம்பரிதி

Image
Apr 26, 2019 07:08:55pm 2 Views “அதிமுக என்ற கட்சி விரைவில் காணாமல் போய்விடும்” அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டிருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அண்மையில் கூறிய இந்தக் கருத்து பெரிய சலசலப்பை ஏற்படுத்தவில்லை. டிடிவி தினகரன் அப்படித்தானே சொல்வார் என பொதுவெளியில் படர்ந்து படிந்துள்ள பார்வை அதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால், அதிமுக என்ற அரசியல் கட்சி காணாமல் போவது, இத்தனை காலமும் அதனை நம்பி ஏற்று, அதனுடன் கட்டிப்புரண்டு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருந்த அடிமட்டத் தொண்டனுக்கு பெரும் வாதையாகவே இருக்கும். திரைச்செல்வாக்கும், அரசியல் சாயையும் இரண்டறக் கலந்து உருவான எம்ஜிஆர் என்ற கதம்ப ஆளுமையால் வடிவமைக்கப்பட்ட வண்ணமயமான அரசியல் உலகம்தான் “அனைத்திந்திய” அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். சமூகநீதி, சாதிமறுப்பு, தமிழ் உணர்வு என, திமுகவில் இருப்பதைப் போன்ற சித்தாந்த சிடுக்குகள் அற்ற சிங்கார மேடையாகத்தான் அதிமுகவை எம்ஜிஆர் கட்டமைத்தார். திமுகவும் அதன் தலைவராக கலைஞரும் எம்ஜிஆரிடம் தோற்க நேர்ந்த இடம் இதுதான். சரோஜாதேவி, ஜெயலலிதா, வெ...