அண்ணா: போற்றியது போதும், புரிந்துகொள்வோம்: மேனா. உலகநாதன்
Wow தமிழா இணையதளத்தில் வெளியான கட்டுரை (03.02.2023) - இணைப்பு - https://wowtam.com/4-anna-enough-praise-lets-understand/16507/ தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத புவி ஈர்ப்பு விசையாக, இன்றளவும் மக்களைச் சுண்டி இழுத்துச் சுழன்று வரும் மூன்றெழுத்து மந்திரச் சொல் ‘அண்ணா’. 1969 பிப்ரவரி 3 அவர் மறைந்த போது, அப்போதைய தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர், சுமார் ஒன்றரை கோடி பேர் சென்னையில் கூடினர். இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள ஒரு மாநில முதலமைச்சரின் மறைவுக்கு இத்தனை பெரிய மக்கள் கூட்டமா என உலகமே வியந்தது. அண்ணனை வழியனுப்ப வந்த அந்தக் கண்ணீர்க் கூட்டம் கின்னஸ் புத்தகத்தில் சாதனையாகவும் இடம் பெற்றது. காவிபடிந்த பற்கள்… அன்றாட சவரத்தை மறந்த முகம்… நிறமோ மங்கலானது… உயரமோ குட்டை… இப்படிப்பட்ட தோற்றத்தைக் கொண்ட ஒரு மனிதர் மீது, மக்களுக்கு இத்தனை பெரிய ஈர்ப்பு ஏற்பட என்ன காரணம்…? தமிழகத்தின் இன்றைய தலைமுறைக்கு எளிதில் புரிந்துகொள்ள முடியாத புதிர்தான் இது. பகுத்தறிவு, சமூகநீதி பாதையில் அவர் மேற்கொண்ட பயணம், எழுச்சியுடன் தொடங்கிய அரசியல் இயக்கம், அசாத்...