Posts

Showing posts from October, 2021

ஜெயலலிதா ஈழத்தாயா? - திரிக்கப்பட்ட வரலாற்றின் மறுபக்கம்

  விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைத் தூக்கிலிட வேண்டும் என்று கொக்கரித்த ஜெயலலிதாவை, கலைஞரையும், திமுகவையும் வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே 2011 தேர்தலில் ஈழத்தாய் என்று பலர் வழிபட்டதும், அதனால் ஏற்பட்ட வலிகளைத் தமிழ்நாடு 10 ஆண்டுகள் அனுபவித்ததும் நம் கண்முன்னால் நடந்து முடிந்த அவல வரலாறு. ஈழத்தாய் என்று இவர்களால் அழைக்கப்பட்ட ஜெயலலிதா ஈழத்தையும், விடுதலைப் புலிகளையும் ஆதரித்தவரா? ஈழத்தமிழர்கள் மற்றும் விடுதலைப் புலிகள் குறித்த ஜெயலலிதாவின் நிலைப்பாடு எப்படி எல்லாம் இருந்து வந்திருக்கிறது என்பதை 2009 ஆம் ஆண்டு மே 6 ம் தேதி வினவு இணையத்தில் வெளிவந்துள்ள இந்தக் கட்டுரை விவரிக்கிறது…   ராஜீவ் கொலைக்கு மு ன் தி.மு.க ஆட்சியைக் கலைப்பதற்காகவே ‘புலிகளின் ஆயுதக் கலாச்சாரத்தால் தமிழ்நாட்டில் பொது ஒழுஙகிற்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஆபத்து ஏற்பட்டு விட்டது’ எனப் பீதியைக் கிளப்பினார்.ராஜீவ் கொலைக்கு முன்பே தன்னைக் கொல்ல சதி நடப்பதாகக் கூறிய ஜெ, எம்.ஜி.ஆர் சமாதிக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற போது தன்னைப் பார்க்க வந்த தனது ரசிகரையே ‘விடுதலைப்புலி என்னைக் கொல்ல வந்தான்’ எனக் ...