Posts

பீறிடும் இறந்த காலம்

Image
  வண்ணம்  வெவெளுக்காத நினைவுகள் அலைபாயும் வெளியில் இருந்து வாழ்வை அத்தனை  எளிதில்  பிரித்தெடுக்க முடிவதில்லை பீறிடும் இறந்த காலத்தின் மணத்தில்  மூச்சுத் திணறும் நிகழ்காலத்தின் மீதேறி  நர்த்தனமாடிக் களைத்துப் போய்  வருகிறது எதிர்காலம் பசுமையும் வெயிலும் முயங்கிச் சூழ்ந்த  பழங் கூட்டை நோக்கித் திரும்பி  வந்திருக்கிறது பறவை இதயத்தின் படபடப்பில் சிறகுகள் சோர்ந்து மண்டியிட்ட போது தலைகோதி அமைதிப்  படுத்திய கரங்களின் வழியே சுரந்து கவிந்தது ஈன்ற பொழுதினும் பெரிதுவந்து கசிந்த தாய்மையின் நிழல்

அண்ணா: போற்றியது போதும், புரிந்துகொள்வோம்: மேனா. உலகநாதன்

Image
 Wow தமிழா இணையதளத்தில் வெளியான கட்டுரை (03.02.2023) -  இணைப்பு - https://wowtam.com/4-anna-enough-praise-lets-understand/16507/ தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத புவி ஈர்ப்பு விசையாக, இன்றளவும் மக்களைச் சுண்டி இழுத்துச் சுழன்று வரும் மூன்றெழுத்து மந்திரச் சொல் ‘அண்ணா’. 1969 பிப்ரவரி 3 அவர் மறைந்த போது, அப்போதைய தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர், சுமார் ஒன்றரை கோடி பேர் சென்னையில் கூடினர். இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள ஒரு மாநில முதலமைச்சரின் மறைவுக்கு இத்தனை பெரிய மக்கள் கூட்டமா என உலகமே வியந்தது. அண்ணனை வழியனுப்ப வந்த அந்தக் கண்ணீர்க் கூட்டம் கின்னஸ் புத்தகத்தில் சாதனையாகவும் இடம் பெற்றது. காவிபடிந்த பற்கள்… அன்றாட சவரத்தை மறந்த முகம்… நிறமோ மங்கலானது… உயரமோ குட்டை… இப்படிப்பட்ட தோற்றத்தைக் கொண்ட ஒரு மனிதர் மீது, மக்களுக்கு இத்தனை பெரிய ஈர்ப்பு ஏற்பட என்ன காரணம்…? தமிழகத்தின் இன்றைய தலைமுறைக்கு எளிதில் புரிந்துகொள்ள முடியாத புதிர்தான் இது. பகுத்தறிவு, சமூகநீதி பாதையில் அவர் மேற்கொண்ட பயணம், எழுச்சியுடன் தொடங்கிய அரசியல் இயக்கம், அசாத்தியமான அவரது ப

இளவேனில்: சிவந்து கருத்த சிந்தனை நதி! (05.01.2021 அன்று இளவேனில் மறைவை ஒட்டி இந்து தமிழ் நாளேட்டில் நான் எழுதி வெளிவந்த கட்டுரை)

Image
  https://www.hindutamil.in/news/opinion/columns/619182-ilavenil.html “ஆனாலும் இந்த உலகம் இன்னும் அழகானதாகவே இருக்கிறது”, ‘ஆத்மா என்றொரு தெருப்பாடகன்’ என்ற தனது படைப்பை இப்படித்தான் தொடங்கியிருப்பார் இளவேனில். நிறையப் பேர் அதன் தாக்கத்தில் கவிதையெழுத வந்தார்கள் என்பது அப்படைப்பின் வெற்றி. நெடும் பாலையில் கொடும் பயணம் என்று சொல்லத் தக்க வாழ்வை நெடுகச் சுமக்க நேர்ந்த நிலையிலும், குதர்க்கமும் குழப்பமுமான இந்த மனிதர்களை ஒருபோதும் அவருக்கு வெறுக்கத் தெரியவில்லை. அதனால்தான் இந்த உலகம் அவருக்கு இறுதிவரை அழகானதாகவே காட்சியளித்திருக்கிறது. “மனிதனைவிடச் சிறந்த புத்தகம் எக்காலத்திலும் எழுதப்பட்டதில்லை” என்ற அவரது கனவுநாயகன் கார்க்கியின் சொல்லாடலை அடிக்கடி உச்சரித்துப் புளகாங்கிதம் அடைவதற்கும்கூட, மானுடத்தின் மீதான தீராக் காதலே காரணம். பொதுவெளியில் பெரும் அடையாளங்களாக உலவிவரும் பலருக்கும் இளவேனில் என்ற சிந்தனையாளர், ஒரு ரகசிய சினேகிதனாகவே இருந்துவந்திருக்கிறார். ஏனெனில், மானுடம் குறித்து அவரிடமிருந்து ஊற்றெடுத்துக்கொண்டே இருந்த தீராத பாடுபொருள் மீதான மோகமே காரணம். சிறுவனாக இருந்தபோதே கோவில்பட்டியி

நடை

Image
  நடந்தாயிற்று நிறையவே நடக்கக் கூடாது எனினும் அவை அனைத்தும் நிறைய நிறையவே நடந்தாயிற்று தேடல் மட்டுமேனும் எஞ்சுமா எனுமளவிற்கான தேடலும் சலிப்பின்றி தொடர்கிறது புன்னகையைத் தேடி வெகு தொலைவு நடந்தாயிற்று குளமாகும் விழிகளும் நடுங்கியபடி கூப்பும் கரங்களும் சொல்லத் தவறிய செய்திகளின் குவியல்களுக்கு அடியில் தேடி வந்த புன்னகை புதைந்து கிடக்கக் கூடும் தேடலின் தீர்க்கத்தால் வாய்த்த துலக்கத்தின் ஒளி விழிகளில் ததும்பிச் சுடர்ந்து நெடுந் தூரம் பாய்கிறது பரவும் வெளிச்சத்தில் தெரியும் குறுங் குன்றுகள் அனைத்தும் மரணித்த புன்னகைப் பூக்களின் குவியல்கள் என்பதும் புரிகிறது எனினும் இது வெறும் குப்பைகளைக் கிளறுவதற்கான நடை அன்று - மேனா . உலகநாதன்  

ஜெயலலிதா ஈழத்தாயா? - திரிக்கப்பட்ட வரலாற்றின் மறுபக்கம்

  விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனைத் தூக்கிலிட வேண்டும் என்று கொக்கரித்த ஜெயலலிதாவை, கலைஞரையும், திமுகவையும் வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே 2011 தேர்தலில் ஈழத்தாய் என்று பலர் வழிபட்டதும், அதனால் ஏற்பட்ட வலிகளைத் தமிழ்நாடு 10 ஆண்டுகள் அனுபவித்ததும் நம் கண்முன்னால் நடந்து முடிந்த அவல வரலாறு. ஈழத்தாய் என்று இவர்களால் அழைக்கப்பட்ட ஜெயலலிதா ஈழத்தையும், விடுதலைப் புலிகளையும் ஆதரித்தவரா? ஈழத்தமிழர்கள் மற்றும் விடுதலைப் புலிகள் குறித்த ஜெயலலிதாவின் நிலைப்பாடு எப்படி எல்லாம் இருந்து வந்திருக்கிறது என்பதை 2009 ஆம் ஆண்டு மே 6 ம் தேதி வினவு இணையத்தில் வெளிவந்துள்ள இந்தக் கட்டுரை விவரிக்கிறது…   ராஜீவ் கொலைக்கு மு ன் தி.மு.க ஆட்சியைக் கலைப்பதற்காகவே ‘புலிகளின் ஆயுதக் கலாச்சாரத்தால் தமிழ்நாட்டில் பொது ஒழுஙகிற்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஆபத்து ஏற்பட்டு விட்டது’ எனப் பீதியைக் கிளப்பினார்.ராஜீவ் கொலைக்கு முன்பே தன்னைக் கொல்ல சதி நடப்பதாகக் கூறிய ஜெ, எம்.ஜி.ஆர் சமாதிக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற போது தன்னைப் பார்க்க வந்த தனது ரசிகரையே ‘விடுதலைப்புலி என்னைக் கொல்ல வந்தான்’ எனக் கூறி அவதூ

அண்ணா குறித்து OH TAML இணையத்தில் மேனா. உலகநாதன் அளித்த பேட்டி

எங்கே அந்தச் சூரியன்?

Image
  (தாகம் இதழுக்காக 2017 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரையின் முழுமையான வடிவம்... உடன்பிறப்புகள் கலைஞருக்கு எழுதுவதாக அமைந்தது)   ‘அ ம்பாள் எப்போதடா பேசினாள்… அறிவு கெட்டவனே…’ ‘ராமர் எந்தக் கோவிலில் பொறியியல் படித்தார்’ இந்தக் கேள்விகளை இந்தியாவில் உள்ள எந்தத் தலைவனாலாவது இன்று கேட்க முடியுமா? புராண, இதிகாச பொய்களைக் கட்டவிழ்த்து விட்டபடி, சுவாமி… நாதா… என்று பிதற்றிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவின் உச்சி மண்டையில் அடித்து நீ எழுப்பிய அந்த முதல் கேள்வியில் பழமைவாதிகள் நிலைகுலைந்ததை பழங்கணக்கெற்று  ஒதுக்கிவிட முடியுமா? அதற்குப் பிறகு சுமார் 50 ஆண்டுகள் கடந்த பின்னர், பகுத்தறிவுக் காரமும், தீரமும் சற்றும் குறையாமல், சேதுசமுத்திரத் திட்டத்திற்கு எதிராக ராமர்பாலம் என்ற கற்பனையை முன்வைத்த இந்துத்துவ மூர்க்கர்கள் இடிந்து போகும் வகையில் நீ எழுப்பியதுதானே அந்த இரண்டாவது கேள்வி. தமிழ்ச் சமூகத்தை, பொய்ம்மைகளின் மயக்கத்தில் இருந்து விழித்தெழ வைத்து, அறிவு வெளிச்சம் பெருக்கெடுக்கும் பெருவெளிக்கு இழுத்து வர வேண்டும் என்பதற்காக இதே போன்ற எத்தனையோ கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருப்பாயே? இப்போது மட்டும் என்னாய